பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 142
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் 15ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ள நிலையில் முன் ஏற்பாடு பணிகளை திருச்சி கலெக்டர் சரவணன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செயத நிலையில்
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என கிராம கமிட்டியினர் அறிவித்து உள்ளனர்.

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுவது வழக்கம்

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுப் பொங்கல் என்று விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

வழக்கமாக கிராமத்தில் உள்ள திடலில் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தங்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர கோரி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனுவைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ஒப்புதலோடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதியான பொங்கல் பண்டிகை அன்று மாலை தமிழக துணை அமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி கலெக்டர் சரவணன் அரசு அதிகாரிகளுடன் துணை முதல்வர் திறந்து வைக்க உள்ள ஜல்லிக்கட்டு மைதானம் தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் ஜனவரி 16ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கிராம கமிட்டி தெரிவிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து எங்கள் பகுதிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி உள்ளது.
வருடாந்தோறும் ஊடகங்களின் ஒத்துழைப்பால் எங்கள் ஜல்லிக்கட்டு போட்டி ஆனது இந்த உலகிற்கு சென்று வருகிறது. புதிய மைதானத்தில் களம் இறங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும், உற்சாகமாக உள்ளனர். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும்வீரருக்கு முதன் முறையாக முதல் பரிசாக கார், மற்றும் இரண்டாம் பரிசு டூவீலர், வழங்கப்படும். அதே போல் களம் காணும் அனைத்து காளைகளுக்குமே வேஷ்டி சேலை பரிசாக வழங்கப்படும் என கிராம கமிட்டினர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.