திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டினர் பங்கேற்பு

0 110
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா_ வெளிநாட்டினர் பங்கேற்பு

தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். அவற்றில் மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் ஆகும்.

இப்பண்டிகை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாகக் காணப்படுகின்றது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர்.

இப்பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி ஆகும். பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போகி தினத்தின் சாராம்சமாகும்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் துவக்கி வைத்தார். இதில் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் . நடனம் மற்றும் பானை உடைத்தல் கயிறு இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்து மேலும் மாட்டு வண்டியில் எறி அலுவலகத்தை சுற்றி வந்து போட்டிகளை கண்டு களித்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.