ஒருமாதமாக காவிரி குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

0 175
Stalin trichy visit

திருச்சி, ஜன.21  சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் இல்லாத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு எதுமலை கிராமத்தில் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த ஒரு மாத காலமாக காவேரி குடிநீர் வராததால் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மண்ணச்சநல்லூரை அடுத்த தத்தமங்கலம் பாளையூர் தெற்கு எதுமலை கிராம சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அப்போது, சாலையின் ஒருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி பறிக்கப்பட்டதால் எதுமலை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதன் காரணமாக சுமார் 1மாதங்களாக எதுமலை ஊராட்சியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் குடிநீர் குழாயை சீர் செய்ய எதுமலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நட வடிக்கை இல்லை.இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி, காளி குடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சிறுகனூர் போலீசார் குடிநீர் குழாயைவிரைந்து சீரமைக்க உறுதி அளித் தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.