தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை

0 144
Stalin trichy visit

திருச்சி, ஜன.24 திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் மாவட்ட நிருவாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) அருணகிரி, துணை இயக்குநர் பிரபாவதி, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.