பார்க்கவ குல முன்னேற்ற சங்க அவசர ஆலோசனை கூட்டம்

0 164
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  பார்க்கவ குல முன்னேற்ற சங்க அவசர ஆலோசனை கூட்டம்
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர்  மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் அவசர சிறப்பு ஆலோசனை கூட்டம்
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் திருச்சி, மார்ச் 9 நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கும் தலைவர் பச்சமுத்துவிற்குஸ
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்

இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட்டு நமது சங்கம் செயல்படும்.

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி. பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற பாரிவேந்தர் யாரை தேர்தலில் போட்டியிட செய்தாலும் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து அவர்களை வெற்றிபெறச் செய்வோம்.

பாரிவேந்தர் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பிப்ரவரி – 8ஆம் தேதி கடலூர் மாவட்டம், வேப்பூரில் நடைபெற்ற 4-வது மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு தமிழகமே உற்று நோக்கும் வகையில் வெற்றிபெறச் செய்த இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்

தமிழக பெண்களுக்கு அரசு பணத்தை ஐந்தாயிரம் என தேர்தல் காளத்தில் இலவசமாக வழங்குவதை கண்டிக்கிறோம். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தரமாக அரசு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழக சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஐந்தாயிரம் கூலி. உரம் மானியமாக தமிழக அரசு வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் அவசர சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.