புதிய உயர் மின் கோபுர விளக்கு : அமைச்சர் அன்பில் மகேஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்

0 162
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9 திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய உயர் மின் கோபுர விளக்கு (High Mast Light) அமைக்கும் பணி நிறைவடைந்து இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர்  ராஜாத்தி (எ) சல்மா  தலைமை வகித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய உயர்மின் கோபுர விளக்கினை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

துவாக்குடி நகர்மன்றத் தலைவர், காயாம்பு,  நகர்மன்றத் துணைத் தலைவர்லலிதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இ புதிய உயர்மின் கோபுர விளக்கினால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி (எ) சல்மா,  2025-2026-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் இந்த உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

துவாக்குடி நகராட்சி, வார்டு எண்: 20-ல் அமைந்துள்ள பின்வரும் முக்கிய சந்திப்புகளில் வெளிச்சம் தரும் வகையில் இந்த விளக்கு அமைக்கப்பட்டுள்ளது:
மாதா கோவில் தெரு மாரியம்மன் கோவில் தெரு துவாக்குடி மெயின் ரோடு
வள்ளுவர் தெரு சந்திப்பு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இருந்து வாழவந்தான் கோட்டை செல்லும் சாலையில் வ உ சி நகர் பகுதியில் மற்றொரு மின் கோபுரமும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.