தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் : பாக முகவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
திருச்சி மார்ச் 23 திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் (Booth Agents) ஆலோசனைக் கூட்டம் காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன்
தொகுதி பார்வையாளர் மணிராஜ் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் நகர கழகச் செயலாளர் காயம்பு பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் ஏராளமான பாக முகவர்கள் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆற்றிய எழுச்சி உரை கூட்டத்தில் பாக முகவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் களப்பணிகள் குறித்தும், மக்கள் தொடர்பின் அவசியம் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். அவர் பேசியதாவது: “கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பது பாக முகவர்களின் முதன்மையான கடமையாகும். அந்தந்தக் குடும்பத்தினர் அரசின் எந்தெந்தத் திட்டங்கள் மூலம் நேரடியாகப் பயன் பெற்றுள்ளனர் என்பதை அடையாளம் கண்டு, அவர்களிடம் எளிய முறையில் விளக்கிப் பேசி மக்களுடன் கலந்துரையாட வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்
மேலும், திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ள எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பட்டியலிட்டு, அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.