வெங்காய மண்டி வியாபாரிகள், தொழிலாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 2 திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரியமங்கலம் பால்பண்ணை சர்வீஸ் ரோட்டில் அமைந்துள்ள வெங்காயம் மண்டி வியாபாரிகளிடம் மற்றும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்
திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி பால்பண்ணை சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது
கடந்த காலங்களில் தமிழக அரசு செய்த சாதனைகளையும், திருவெறும்பூர் தொகுதியில் தான் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களையும் மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
வரும் காலங்களிலும் தொழிலாளர்களுக்கும், வணிகச் சங்கங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து தருவேன்” என உறுதியளித்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்வின் போது மு. மதிவாணன் (மாநகரக் கழகச் செயலாளர்) விஜயகுமார் (பகுதிக் கழகச் செயலாளர்) சங்க நிர்வாகிகள் தலைவர் R.K.கருப்புசாமி பொருளாளர் மணி துணை தலைவர் -P.நடராஜ், துனை செயலாளர் – S.பரமசிவம் கமிட்டி உறுப்பனர் A. பழனிச்சாமி S.பழனிமுத்து p.செந்தில்குமார் K.ராமசந்திரன் N. இளங்கோ மோகன் u.சரவணன K.சூப்பரமணி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.