திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார்

0 28
Stalin trichy visit

திருச்சி, ஏப். 3  திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் இன்று திருச்சி இபி ரோடு‌ பகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் மலைக்கோட்டை பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் பேட்டி..

திருச்சி கிழக்கு தொகுதியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்ற வில்லை, திருச்சி கிழக்கு தொகுதியை பொருத்தவரை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களை மக்களே நேரில் பார்ப்பது அரிதாக இருந்தது.

மேலும் அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது ஆகையால் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்றால் திருச்சி கிழக்குத் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரியான தொகுதியாக உருவாக்குவேன். மக்களோடு மக்களாக என்றும் நான் இருப்பேன். திருச்சி கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் வர்க்கம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி ஆகையால் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நிச்சயம் நான் உறுதுணையாக இருப்பேன் காந்தி மார்க்கெட் இடம் மாற்றுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.