கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, த.வெ.க. தலைவர் விஜய் வேட்பு மனுக்கள் ஏற்பு

0 59
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர், சிறீரங்கம் என 9 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 30 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

இதில், முதல்நாளில் மொத்தம் 23 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஏப்.2ஆம் தேதியும், 4ஆம் தேதியும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நிறைவு நாளான திங்கள்கிழமை (ஏப்.6) மட்டும் 9 தொகுதிகளி லும் சேர்த்து 158 மனுக்கள் பெறப்பட்டன.
முதல்நாள் தொடங்கி இறுதி நாள் வரையில் பெறப்பட்ட மனுக்களையும் சேர்த்து தொகுதி வாரியாக பெறப்பட்ட மனுக்கள் விவரம்: மணப்பாறையில் 23, சிறீரங்கத்தில் 36, திருச்சி மேற்கில் 29, திருச்சி கிழக்கில் 39, திருவெறும்பூரில் 38, லால்கு டியில் 30, மண்ணச்சநல்லூரில் 37, முசிறியில் 21, துறையூர் 23 மொத் தம் 276 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலினை இன்று தொடங்கியது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தொட்டியம் ராஜசேகரன், திருச்சி கிழக்குத் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஜோசப் விஜய், திருச்சி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் தா.பாரி வள்ளல் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் – ப.குமார் திமுக வேட்பாளர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் – நவல்பட்டு விஜி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் – ராஜேஷ் ஆகியோர் வெட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் ரமேஷ் வேட்பு மனு ஏற்கப்பட்டது. திருச்சி மேற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் ராமமூர்த்தி வேட்பு மனு ஏற்கப்பட்டது
மணப்பாறை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கதிரவன் வேட்பு மனு ஏற்கப்பட்டது
லால்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் கு.ப. கிருஷ்ணன் வேட்பு மனு ஏற்கப்பட்டது
திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் நவல்பட்டு விஜி வேட்பு மனு ஏற்கப்பட்டது
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது, அதிமுக வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கதிரவன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் மற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.