திருச்சியில் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் முதல் கிளை துவங்கியது

0 264
Stalin trichy visit

திருச்சி, ஏப். 11  கோயமுத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் திருச்சியில் முதல் கிளை துவங்கியது

தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ்மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திருச்சி தில்லை நகர் 11வது குருக்கு சாலையில் சாமி டவரில் புதிதாககிளை தொடங்கப்பட்டுள்ளது

1998 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது கோயமுத்தூரில் இருவருக்கும் மேற்பட்ட கிளைகளையும் சென்னையில் பல கிளைகளையும் நடத்தி வருகிறது
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பாதாம் ரோஸ் லட்டு,குல்காந்த் பிஸ்கட்போன்ற நவீன இணைப்புகளுடன் கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் இளநீர் அல்வா போன்ற பாரம்பரிய சிறப்பு வகைகளும் இணைந்து மொத்தம் 200க்கும் மேற்பட்ட வகையான இனிப்புகள் நாள்தோறும் தயாரிக்கப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது

மேலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நம்மாழ்வார் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஆகியோர் கூறுகையில்  விரைவில் ஈரோடு மற்றும் மதுரை நகரங்களிலும் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளன பாலக்காடு கிளையின் வெற்றியை தொடர்ந்து கேரளா மாநிலத்திலும் கொச்சியிலும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.