த.வெ.க. நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

0 192
Stalin trichy visit

திருச்சி, ஏப்.13  திருச்சியில் தவெக நிர்வாகி மற்றும் அவருடைய நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டியிடும் நிலையில் த.வெ.க.வினர் வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தி, மற்றும் விசில் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சூசையப்பிள்ளை தெரு பகுதியில் உள்ள த.வெ.க நிர்வாகி சம்பத் என்கிற சுமங்கலி சம்பத் வீடு மற்றும் ரெங்கா நகரில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மூக்குத்தியோ, விசிலோ கிடைக்கவில்லை. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் புறப்பட்டு சென்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.