மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

0 168
Stalin trichy visit

திருச்சி, ஏப். 16  திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பொன்மலை பகுதி இளைஞர் அணி துணைச் செயலாளர் ராம் பிரபு தலைமையில் இந்த இணைவு நிகழ்வு நடைபெற்றது.
மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்த இளைஞர்களுக்கு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.
இந்நிகழ்வில் பொன்மலை பகுதிச் செயலாளர் தர்மம், வட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.