மண்ணச்சநல்லூர் தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி

0 175
Stalin trichy visit

திருச்சி,ஏப்.17 திருச்சி மாவட்டம், பெண் தற்கொலை விவகாரம் -மணச்சநல்லூர் திமுக வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் -தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பேட்டி

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் பசுபதிபாண்டியளின் மூத்த சகோதரி பார்வதி சண்முகசாமி தலைமையில் உறையூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில மாணவர் அணி தலைவர் ஓ.எம்.பாலா

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தொகுதியின் வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரிப்பின் போது பரிசுப் பொருட்கள் வழங்குதல் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது குறித்து திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு கண்டிக்க வேண்டும் கண்டிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

பெண் தற்கொலை குறித்த விசாரணையை காவல்துறையின் மேற்கொள்ள வேண்டும் வேட்பாளர் கதிரவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

மணச்சநல்லூர் பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு எதிராக நாங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளோம். அது மட்டுமல்ல திருச்சியில் உள்ள 9சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை எதிர்த்து எங்கள் நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

இந்நிலையில் எங்களுக்கு ஆதரவு தரும் கட்சியின் வெற்றிக்கு நாங்கள் தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சரவணன்
திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜித், மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.