கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு

0 42
Stalin trichy visit

திருச்சி, ஏப். 17 கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி காந்தி சந்தையில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் ஆதரித்து, தமிழக அமைச்சர்கள் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நடைபயண வாக்கு சேகரிப்பு : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் காந்தி சந்தை பகுதியில் நேற்று காலை முதலே நடைபயணமாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

முக்கிய வாக்குறுதி : பிரச்சாரத்தின் போது வியாபாரிகளிடையே பேசிய அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக காந்தி சந்தை இடமாற்றம் செய்யப்படாது. திமுக ஆட்சியில் காந்திசந்தை இங்கிருந்து மாற்றப்படாது, இதே இடத்திலேயே தொடர்ந்து செயல்படும் என உறுதி அளித்தனர். உங்கள் வியாபாரம் பாதுகாக்கப்படும், உங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர் கதிரவன், பகுதி கழகச் செயலாளர்கள் பாபு, மோகன், டிபிஎஸ்எஸ் ராஜ்குமார், மணிவேல், காந்தி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.