காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா, போதை பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

0 25
Stalin trichy visit

திருச்சி, மே 25 காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் திருச்சி மாநகரம் காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் கூறி போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி  அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.