முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் : அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 22 முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள்; திருச்சியில் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்த அமைச்சர் ரமேஷ்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் சிறப்பு ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.

முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்விற்குப் பிறகு, அமைச்சர் ரமேஷ் தானாக முன்வந்து ரத்ததானம் செய்து, தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார்.
இந்த முகாமில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.