மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 4 பேர் கைது
திருச்சி, ஜூலை 13 மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்; திருச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவகங்கையில் இருந்து இளை யான்குடி செல்லும் சாலை யில் உள்ள இந்திரா நகர் ரெயில்வே கேட் அருகில் போதைப்பொருட்களுடன் சிலர் நிற்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட னர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் இளையான்குடி புதூர் தீப்பு லிக்கேணியில் வசிக்கும். சுல்தான் தெருவை சேர்ந்த ரசூல்தீன் (வயது35), எல்லீஸ் ரோடு முக்தர் நிஷா பேகம் தெருவைச்சேர்ந்த அபு என்ற சகுபர் சாதிக் (26), திருச்சி ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்த முகமது ஹபீஸ்(28), திருச்சி முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ரபீக் என்ற பாபு(30) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனை செய்தபோது அதில் விலை உயர்ந்த போதைப்பொருளான மெத்த பெட்டமைன் 3கிலோ 100 கிராம் வைத்திருந்தது. போதைப்பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டது. போதை பொருட்களை மலேசிய நாட்டுக்கு கடத்துதுவதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் பல ஆண்டுகளாக போதைப்பொ ருள் கடத்தலில் குருவிகள் போல செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை கங்கை நகர் போலீசார் வழக் குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் மற் றும் 3 செல்போன்கள் பறிமு தல் செய்யப்பட்டன. கைதா னவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சிவகங்கையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.