மணப்பாறையில் 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

0 16
Stalin trichy visit

திருச்சி, அக்.15 மணப்பாறையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
400 கர்ப்பிணிகளுக்கு அறுசுவையுடன் வழங்கபட்ட உணவு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்தாய் வாழ்த்துத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பரதநாட்டிய ஆடினர். பின்னர் 400 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனம் பூசி மாலை அணிவித்து அமர வைக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பழங்கள், வளையல், சேலை, இனிப்பு கார வகைகள் உள்ளிட்டவைகளை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வழங்கினார்.

பின்னர் பலவகையான உணவுகள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மணப்பாறை தொகுதி மக்கள் தங்களின் கோரிக்கை மனு அளிக்க 2 பிரத்யேக இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்ணும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.