தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி DYFI முற்றுகைப் போராட்டம்

0 15
Stalin trichy visit

திருச்சி, அக்.16  திருச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி DYFI முற்றுகைப் போராட்டம்- தள்ளுமுள்ளுவில் உதவி காவல் ஆணையர் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்

எஸ் ஐ ஆர் மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை முறைகேடாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சியில் ம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞானேஷ் குமாரை கண்டித்தும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் புதிய சட்டத் விதியை திரும்ப பெற வேண்டும் எனக் கூறியும் தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் போராட்டத்தை முன்னிட்டு தளபதி தபால் நிலையம் முன்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தேசிய கொடியுடன் வந்த வாலிபர் சங்கத்தினர் போலீசாரின் தடுப்புகளை மீறி தபால் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டனர் அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் இரு தரப்பிற்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

இப்போராட்டத்தால் தலைமை தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.