திருப்பூர் இலக்கிய விருது பெற்ற வாழையூர் குணா

0 34
Stalin trichy visit

தமிழகத்தில் இயங்கி வரும் இலக்கியவாதிகளை இனங்கண்டு தேர்வு செய்து, கடந்த 18 ஆண்டுகளாக ‘திருப்பூர் இலக்கிய விருது’ என தமிழ் படைப்பாளர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் உன்னதமான பணியினை செய்து வருபவர்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  இதுவரையில் 29 நாவல்கள் மற்றும்
135 க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திட்ட, எழுத்துலக பிதாமகன்,
சுப்ரபாரதிமணியன் அவர்கள்.சிறந்த சிறுகதையாசிரியருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா விருது, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரிருக்கான விருது, தமிழ்ச் செம்மல் விருது, சிறந்த பொழிபெயர்ப்பாளருக்கான விருது, என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான, தமிழகத்தின் ஆகச் சிறந்த மூத்த எழுத்தாளர். சுப்ரபாரதிமணியன் அவர்கள் ‘கனவு’ எனும் சிற்றிதழை கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் 18 ஆண்டுகளாக கனவு எனும் இலக்கிய அமைப்பு வாயிலாக ‘திருப்பூர் இலக்கிய விருது’ வழங்கி இளம் தலைமுறை எழுத்தாளர்களை, பாராட்டி கௌரவப்படுத்தி, ஊக்கப்படுத்துகின்ற உயரிய இலக்கியப் பணியினை செய்து வருகிறார்.

அதனடிப்படையில். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வாழையூர் கிராமத்தைச் சேர்ந்த வாழையூர் குணா(எ) கு.குணசேகரன் அவர்கள் கடந்த கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வெளிவரும் நாளிதழ்,வாரஇதழ்,மாத இதழ், காலாண்டிதழ் போன்ற இதழ்களில் கவிதை,சிறுகதை, கட்டுரை, என எழுதி வந்தவர்.2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வாழையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து,சுற்றுச்சுழல், சுகாதாரம், உள்ளிட்ட மக்கள் நலப் பணிக்காக இந்திய குடியரசுத் தலைவர் விருதான நிர்மல் புரஸ்கார் விருதினைப் பெற்றவர்.  பதிப்புத் துறையில் பவள விழா காணும் என்சிபிஎச் பதிப்பகம் வாழையூர் குணாசிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு நூலினை வெளியிட்டது.
அந்ந நூலிற்காக 20.10.2026 நேற்று திருப்பூர் இலக்கிய விருதினை கனவு மற்றும் சேவ் அமைப்புகள் வாழையூர் குணா அவர்களுக்கு வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.