மின்னனு பயிர் கணக்கெடுப்பில் பங்கேற்ற வேளாண்மை கல்லூரி மாணவிகள்

0 45
Stalin trichy visit

திண்டுக்கல், செப்.1  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேலக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் மின்னனு பயிர் கணக்கெடுப்பில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ரா. துர்க்காதேவி ,ஜெ .ஜெய சானியா, ஜானட், த .மீனா மற்றும் ரா. பிரியதர்ஷினி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பழனி வட்டார கிராமப்புற பகுதிகளில் தங்கி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு களப்பணி மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று வேளாண்மை கல்லூரி மாணவிகள் அமரப்பூண்டி அருகில் மேலக்கோட்டை கிராமத்தில், மின்னனு பயிர் கணக்கெடுப்பில் (DCS- Digital Crop Survey) கலந்து கொண்டனர். அந்தக் கிராமத்தில் பயிர் விவரங்களை பதிவு செய்யும் பணிகளை உதவி வேளாண் அலுவலர் திருமதி. ரேவதி முன்னிலையில் மேற்கொண்டனர் மாணவிகள் விவசாய நிலங்களில் சென்று, பயிர்களின் விவரம், பரப்பளவு. பயிரிடும் முறை போன்ற தகவல்களை வேளாண்மை துறையுடன் சேர்ந்து சேகரித்தனர்.

இந்நிகழ்வின் மூலம், மாணவிகள் பயிற்சி மட்டுமல்லாமல், விவசாயத் துறையுடன் இணைந்து தொழில்நுட்ப அனுபவத்தையும் பெற்றுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகள், மாணவிகளுக்கு கிராமப்புற வேளாண் நிலைமைகள் குறித்த நடைமுறை அறிவை வழங்குவதோடு, விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைகின்றது.

Leave A Reply

Your email address will not be published.