அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழா: தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை
திருச்சி, அக். 14 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் 17.10.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் திருவெறும்பூர் பெல் நிறுவனம் அருகிலுள்ள கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக, மாநில சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், வீரங்கனைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கழக நிர்வாகிகள், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு அந்தந்த பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.