கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் மறியல்
திருச்சி, ஜன.6 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மறியல் _ 200க்கும் மேற்பட்டோர் கைது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313 நிறைவேற்றிட வலியுறுத்தி இரண்டாம் கட்ட தர்ணா ஒரு நாள் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் ராணி தலைமை வகித்தார் .
இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவித்திட வேண்டும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக பத்து லட்சமும் உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும் மற்றும் மே மாத விடுமுறையை ஒரு மாதமாக வழங்கிட வேண்டும் மேலும் 1993 ஆம் ஆண்டு பணிகள் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களின் பதவி உயர்வை உடனடியாக வழங்கிடவும் பதவி உயர்வில் நேரடி நியமனத்தை கைவிட்டு 100% பதவி உயர்வை அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர் மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர் .