கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
திருச்சி, அக்.11கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16ம்நாள் துக்கநிகழ்வு அனுசரிக்கும் இந்நாளில், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மக்கள் நலனுக்கான பொதுமேடை என்கிற அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அரசியல் பாகுபாடின்றி ஏராளமான பங்கேற்று கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டியும் உயிரிழந்தவர்கள் புகைப்படங்களுக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள், இனியும் இதுபோன்றுஒரு துயரசம்பவம் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்றும் தங்களது கோரிக்கையினை அரசுக்கு முன்வைத்தனர்