திருச்சி காஜாமலை பகுதியில் கார் எரிந்து நாசம்
திருச்சி அக்.31 திருச்சி காஜாமலை குடுமியான் சாகில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 41), இவரது காரை வீட்டில் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. அதனால் காஜா மலை காலனி அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 20 ந்தேதி இவரது கார் எரிந்து கொண்டிருப்பதாக நண்பர் தகவல் அளித்தார். இதையடுத்து
சம்பவ இடத்திற்கு விரைந்த போது கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவர்கள் அருகிலேயே வெடி வெடித்ததால் தீ விபத்து நடந்ததாக தெரிய வந்தது.
 
			