சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் கார் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்
திருச்சி, நவ.22 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் கார் கவிழ்ந்தது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன் 40.இவர் 19ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து அவரது நண்பர்களுடன் அவருக்கு சொந்தமான காரில் சென்னையில் இருந்து சபரிமலை சென்று விட்டு மீண்டும் நேற்று காலை சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை சாய்பாபா கோவில் அருகே கார் சென்று கொண்டிருந்தது. காரை வேல்முருகன் ஓட்டிச்சென்ற நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .