ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர் எடுத்து வந்தவர் மீது வழக்குப்பதிவு

0 38
Stalin trichy visit

திருச்சி, செப்.6 ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டரை பார்சலில் பதிவு செய்து எடுத்து வந்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை வழக்கு பதிவு செய்தது.

திருச்சி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (செப்.4)  ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளர்  பார்சலில் வந்த பொருட்களை ஆய்வு செய்தார். அதில் நாகர்கோவிலில் இருந்து திருச்சி வந்த பார்சலில் சட்டவிரோதமாக இரண்டு எரிவாயு சிலிண்டரை வீட்டு உபயோகப் பொருட்கள் என பதிவு செய்து பாலிதீன் கவரில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக போலியான தகவல் தந்து ரயில்வே பார்சலில் பதிவு செய்த முரளி (வயது 49) கரூர் என்பவர் மீது ரயில்வே சட்டம் 163 & 164 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 5 ல் வழக்கு தொடரப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.