நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி, ஜூலை 11 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமானது இன்று நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்அங்குஅமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் திருச்சி தொகுதி எம். பி துரை வைகோ மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.