பெரம்பலூரில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கி
பெரம்பலூர். ஆக.27 தமிழக முதலமைச்சர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு உதவி பெறும் தந்தை ஹேன்ஸ் ரோவர் தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி சேர்மன் அம்பிகா ராஜேந்திரன், ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன், அல்மா சேர்மன் ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார்,பெரம்பலூர் மாவட்ட திமுக துணை செயலாளர் டி சி பாஸ்கர் பெரம்பலூர் நகராட்சி துணைச் சேர்மன் ஹரி பாஸ்கர், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் நகராட்சி 15வது வார்டு செயலாளர் பரிதி என்கிற நீலமேகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .