வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

0 20
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 20 திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சரவணன் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கட்டுபாட்டு அறைகள், செய்தியாளார் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அன்பரசி (கட்டிடங்கள்), கண்ணன் (மின்சாரம்) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.