டிட்டோஜாக் நிர்வாகிகள் திருச்சி எம்.பி.யிடம் கோரிக்கை
திருச்சி, அக்.14 திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ- வை டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் சந்தித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது சம்பந்தமாக தமிழக அரசு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளதை கருத்தில் கொண்டு..
ஒன்றிய அரசை தகுதி தேர்வு தேவையில்லை என்று சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கட்டாய உரிமைச் சட்டம் 2009 இல் பிரிவு 23 இல் திருத்தம் செய்ய வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என டிடோஜாக் மாநில அமைப்பின் முடிவின்படி இன்று கோரிக்கை அளிக்கப்பட்டது.
கோரிக்கை தொடர்பாக விரிவாக நம்மிடம் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவசியம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் டிட்டோஜாக் அமைப்பில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் ஐசக் டேவிட் பெர்ஜித் ராஜன் சுரேஷ் ராஜ், ஹக்கிம் அலி, பவுல்ராஜ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி குமரகுருபரன், பாலகிருஷ்ணன் ஞானமுத்து , ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.