தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் : அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்
திருச்சி, செப்.1 திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்றுதலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பொருளாளர் துரைராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் பழஞ்சூர் செல்வம்,
ஆடுதுறை உத்திராபதி, சந்திரசேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்..
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே. என்.நேரு. வரும் மூன்றாம் தேதி 41 தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது
அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி என அனைவரும் கூறி வருகிறார்கள். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ளவர் கூட்டணி வைக்கிறாரா? தனித்து தேர்தலை சந்திக்க போகிறாரா? என்பது தெரியவில்லை தற்போது வரை தனித்து தான் தேர்தலை சந்திக்க போகிறேன் என கூறியுள்ளார் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் பார்வையாளர்கள் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராக என கூறி வருகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலும் திமுகவிற்கு சவாலாக இருக்கும் ஒரு தேர்தலில் கூட்டணி சேர்ந்து நம்மை எதிர்ப்பார்கள் ஒரு தேர்தலில் ஓட்டை பிரிப்பதற்காக தனியாக கூட்டணி வைத்து எதிர்ப்பார்கள். திமுகவை எதிரியாக கருதி தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கலைஞரும் – முதலமைச்சர் ஸ்டாலினும் வெற்றி பெற்று வந்துள்ளார்கள்.
நான் திமுகவில் 30 ஆண்டு காலம் மாவட்ட செயலாளராக இருந்தேன். தற்பொழுது தலைமை கழகத்தில் பணியாற்றி வருகிறேன் இதுவரை நான் ஒருவரை கூட பொறுப்பில் இருந்து நீக்கியது கிடையாது. அதற்கு தகுந்தது போல் அனைவரும் பணியாற்ற வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் தங்களால் முடியவில்லை என்றால் அதை முன்பே கூறிவிட்டால் வேறு நபரை அந்த பொறுப்பிற்கு அமர்த்தி விடுவோம்.
திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது பகுதி டெல்டா பகுதி. நமக்குள் எவ்வளவு மன சஞ்சலங்கள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு பணியாற்ற வேண்டும். இரண்டாவது முறையாக முதலமைச்சர் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய பகுதி கலைஞர் காலத்திலும் சரி தற்போதும் சரி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது என் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர் உத்ராபதி செல்வம் பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா நாகராஜ் கனகராஜ் கவுன்சிலர்கள் நாகராஜன், கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மற்றும் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.