தேர்தல் பத்திரமாக மார்ட்டின் குழுமத்திடம் 500 கோடி ரூபாய் பெற்ற திமுக: ஜோஸ் சார்லஸ் மார்டின் குற்றச்சாட்டு

0 15
Stalin trichy visit

திருச்சி, ஏப்.21  திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியது :

அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது சட்டபூர்வமாக இருந்த காலத்தில் எனது தந்தையை அணுகிய ஆதவ் அர்ஜூனா 500 கோடி ரூபாயை பெற்று திமுகவிடம் வழங்கினார், தேர்தலுக்கு முன்பு அமையப்போவது உங்கள் அரசு எனக் கூறிய திமுக,தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லாட்டரியை சட்டப்பூர்வமாக அனுமதிப்பதற்கு பதிலாக கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்துகொள்ளுமாறு திமுக தலைமை குடும்பத்தினர் எங்களிடம் கூறினர்.

ஆனால் சட்டப்பூர்வமாக மட்டுமே லாட்டரியை விற்பனை செய்வோம் என கூறி எனது தந்தை அதை மறுத்துவிட்டார்.

அதன்பிறகு டாஸ்மாக் மது விற்பனையை முறைப்படுத்தும் பணியை மார்ட்டின் குழுமம் செய்தால் 30ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற திட்டத்தை கூறினோம். ஆனால் அதனை ஏற்காமல் திமுக நிராகரித்துவிட்டது. டாஸ்மாக் விற்பனையை வேண்டுமென்றே முறைப்படுத்தாமல், தற்போது பாட்டிலுக்கு கூடுதல் பணம் பெறுவது முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது.

இதேபோல் மணல் குவாரியை ஏற்று நடத்த எங்களிடம் திமுக கேட்டது, அதற்காக ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் ரொக்க பணமாக தர வேண்டும் என கேட்டபோது, எனது தந்தை அதனை நிராகரித்து விட்டார். எந்த தொழிலை செய்தாலும் அதனை சட்டரீதியாக செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தோம்.

இதேபோன்று திமுக கட்சி அனைத்து திட்டங்களுக்கும் கமிஷன் தொகையை பெற்று கள்ளச் சந்தையில் பணத்தை சேமிப்பது குறிக்கோளாக வைத்துள்ளனர். அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கங்கள் அதிகமாகி இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.