சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
திருச்சி ஏப் 3- திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோமளவள்ளி (வயது 63)இவர் நேற்று வீட்டில் விளக்கை பற்ற வைத்த போது திடீரென்று அவரது சேலையில் தீ பிடித்தது. இந்த தீ திடீரென அவரது உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் கோமளவள்ளி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று
கோமளவள்ளி
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.