வழக்கறிஞர் சங்கம் சார்பில் இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா
திருச்சி, அக்.9 சுதந்திர போராட்ட தியாகி அய்யா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 101ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று காலை திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர்கள் சார்பாக தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் கோ. சங்கர் ஆகியோர் தலைமையிலும் செயலாளர் வழக்கறிஞர் க.ராஜசேகர், பொருளாளர்வழக்கறிஞர் ஒ.முத்துவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
வ ழக்கறிஞர் சிவபாலன் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் துணைத் தலைவரகள் சுந்தரவடிவேல் பிரியா, செயற்குழு உறுப்பினர்கள் சிவா, நர்மதா குசன்,மற்றும் விக்கிரமாதித்தன், மன்னர்மன்னன், கண்ணையன், பொன்மொழி. கோபிநாத், சேகர், வேங்கை ராஜா, பாலமுருகன் பிரேம்குமார் தாமரைசெல்வன். விக்னேஷ் லதா தமிழ் செல்வி சந்திரமோகன் சம்பத் கல்நாயக் பாலா மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக தீனதயாளன் நன்றி கூறினார்
பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.