திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த விவசாயிகளை உடனடியாக விடுவிக்க கோரியும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அதுவரை எங்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அய்யாக்கண்ணு ஒரு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்களிடம் ஆட்சியர் பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அய்யாக்கண்ணு விவசாயிகளிடம் ஆட்சியர் கூறிய விளக்கத்தை எடுத்து கூறினார் இதையடுத்து விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.