இறகுகள் தொண்டு நிறுவனத்தின் தீபாவளி விழா
திருச்சி அக்.13 இறகுகள் தொண்டு நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு தீபாவளி நலத்திட்டம் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் கலை நிகழ்ச்சிகள் இறகுகள் நிறுவனர் ஜே ராபின் மெர்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக டாக்டர் ஏ ஆசியா பேகம் துணை முதல்வர் கி .ஆ. பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, முனைவர் மா பிச்சைமணி முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி ஸ்ரீரங்கம், ஆ விஜயலட்சுமி மாவட்ட சமூக நல அலுவலர் MRSC திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மா நித்யா மாவட்ட திட்ட அலுவலர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர் கோவிந்தராஜ் தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச்சங்கம், வி சீதாராமன் காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம், ஜி திருவானந்தம் காவல் ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு ஸ்ரீரங்கம், டாக்டர் எம் நிலா காவேரி மகளிர் கல்லூரி தன்னாட்சி திருச்சி, அருள் ராபர்ட் பாலின சிறப்பு வல்லுனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பர்ஜானா நிறுவனர் லிம்ராஸ் அகாடமி, சுப்பிரமணியன் பாலாஜி நிறுவனர் பி ரமேஷ் ராமச்சந்திரன் நிறுவனர் தி பெஸ்ட் சூப்பர் மார்க்கெட் ரொட்டேரியன் எஸ் பாலாஜி பிரசிடெண்ட் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி ஆகியோரை கொண்டு குத்துவிளக்கு ஏற்றி 400க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பாக புதிய ஆடை, பட்டாசு பாக்ஸ், மளிகை பொருட்கள் மற்றும் அருஞ்சுவை உணவு குழந்தைகளை மகிழ்விக்க இறகுகள் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உலக சாதனை மிமிக்ரி கலைஞர் விஜய் ஒருங்கிணைப்பில், கவி தமிழ்நாட்டின் முதல் பெண் மேஜிசியன் கலைஞர், தான்சன் இந்தியாவின் ஃபர்ஸ்ட் ஹான்ட் லஸ் ட்ரம்மர், டி2 டிரான்ஸ் குழுவினர் ராஜா, ஆர் ஜே பவுசியா மற்றும் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் தன்னால் தன்னார்வலர்கள், அலுவலக பணியாளர்கள் இவர்களது ஒருங்கிணைப்பில் பண்டிகை நாட்கள் என்பது நாம் மட்டும் கொண்டாடுவது அல்ல மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்வது என்று நோக்கத்தில் பயணிக்கும் இறகுகள் தனது 11 ஆம் ஆண்டு தீபாவளி நலத்திட்ட நிகழ்ச்சியை இறகுகள் முதியோர் இல்லத்தில் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள்.