தா.பேட்டை சிவாலயத்தில் கோ பூஜை விழா

0 21
Stalin trichy visit

தாபேட்டை, மார்ச், 18 தா.பேட்டை சிவாலயத்தில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு கோபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர், ராஜ கணபதி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பசு மாட்டிற்கு நெற்றியில் பொட்டு வைத்து மலர் மாலை சூட்டி புதிய சேலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உலக நன்மைக்காகவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்திடவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் வேண்டி வழிபட்டனர். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுந்தரம், உறுப்பினர்கள் சுமதி, பாலசுப்ரமணியன், நவஜோதி செல்வம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.