மணப்பாறை அருகே பிரேக் பழுதால் பாதியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் : 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது

0 77
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19 மணப்பாறை அருகே பிரேக் கோளாறால் பாதியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில். சுமார் 30 நிமிடம் காலதாமதம்.

கேரளா மாநிலம், குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அய்யலூர் – கல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரேக் குழாயில் ஏற்பட்ட கோளாறால் பிரேக் பழுதானதாக கூறப்படுகின்றது. இதனால் கீரனூர் என்ற இடத்தில் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக கோளாறு சரிசெய்யும் பணி நடைபெற்றது. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டு பின்னர் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

Leave A Reply

Your email address will not be published.