திருச்சியில் “பவர் குரூப்” நிறுவன திறப்பு விழா
திருச்சி, ஜூலை 12 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர பொறுப்பாளர் அப்துல்காதரின் பவர் குரூப் நிறுவன திறப்பு விழா இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோர் தலைமையில் திருச்சி கரூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழாதன் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் வழக்கறிஞர் கலைச்செல்வன், சக்திஆற்லரசு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையில் மாநில துணை செயலாளர் அரசு,
இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான், மாநிலத் துணைச் செயலாளர்கள் புரோஸ்கான், அஷ்ரப் அலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அமைப்பு செயலாளருமான அப்துல் நாசர், மற்றும் சண்முகராஜ், அப்துல் ரஹீம், தேசிங்கு ஐயா மண்டலம் ஜெயினுலாபுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.