கண் தானம் – உடல் தானம் பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
கண் தானம் மற்றும் உடல் தானம் பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளருக்கு நினைவஞ்சலி மற்றும் கண் தானம் மற்றும் உடல் தானம் பதிவு செய்யும் நிகழ்ச்சி முன்னாள் ஒன்றியக்குழு S.முருகேசன் தலைமையில் இன்று நடைப்பெற்றது
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து
கண் தானம் மற்றும் உடல் தானம் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 21 பேர் உடல் தானம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு
சுப்ரமணியன் மாவட்ட செயற்குழு நடராஜன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு ஆணை முத்து, முருகேசன், கிளை நிர்வாகிகள் சரஸ்வதி, நிருமளா சந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.