பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
திருச்சி, ஜன.30 பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து நச்சு தன்மையை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நச்சுத்தன்மை குறியீடுகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களின் பின்புறத்தில் காணப்படும் முக்கோண வடிவ குறியீடுகள் மூலம் மருந்துகளின் நச்சு தன்மை நிலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதையும் அந்த குறியீடுகளை எவ்வாறு சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் மாணவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது மனித உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளக்கம் அளிக்க பட்டது.இவ்வகை பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும்போது கையுறை, முக கவசம், காலுறை நீளக கை சட்டை மற்றும் நீள கால்சட்டை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவதன் அவசியம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மேலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக கருதப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா. சாம்குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்த வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர்.பா.குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப.நந்தகுமார் முதுநிலை உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ம.சுரேஷ் உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடத்தி முடித்தனர்.