தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்
தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தென்னை காண்டாமிருக வண்டு கட்டுப்பாட்டிற்கு இயற்கை பெரோமோன் வலை செயல் விளக்கம் அளித்த வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் இளநிலை வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் அனுபவப் பணி திட்டத்தின் கீழ் பழனி வட்டார பகுதியில் தங்கி விவசாயிகளுக்கான பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழனி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் கிராம விவசாயி காளியப்பன் தென்னைந் தோப்பில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இயற்கை பெரோமோன் வலை தயாரிக்கும் முறையை செய்து காண்பித்தனர்.
இந்த செய்முறைக்கு மாட்டு சாணம், நாட்டு வெல்லம் மற்றும் ஆமணக்கு புன்னாக்கு சேர்த்து தயாரிக்கும் வலை மூலம் காண்டாமிருக வண்டு மற்றும் அதன் புழுக்களை ஈர்த்து பிடித்து அழிக்கலாம். இந்த முறையைப் பயன்படுத்தினால் 7-10 நாட்களுக்குள் வண்டு தாக்குதல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று விவசாயிக்கு மாணவிகள் ரா.துர்க்காதேவி, ஜெ. ஜெய சானியா, ஜானட் , த. மீனா, மற்றும் ரா. பிரியதர்ஷினி ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்தனர்.
இத்தகைய இயற்கை முறைகள் மர சேதத்தைத் தடுப்பதோடு செலவு குறைக்கும் மேலும், வேதியியல் மருந்து பயன்பாடும் குறைய வாய்ப்பு உள்ளது. தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பெறவும் உதவும் என்பதை மாணவிகள் வலியுறுத்தினர்.