நவல்பட்டில் புதிய மின் மயானம் : அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி, ஜூலை 12 திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுள்ள மின்மயானத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.
நவல்பட்டு பகுதியில் இந்த மின் மயானமானது ரூ. 1 கோடியே 93 இலட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ் ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், கயல்விழி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்