திருச்சி மேற்கு தொகுதியில் பட்டா வழங்கும் முகாம்
திருச்சி, அக்.9 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி வருவாய் கோட்டாடசியர் அருள், வட்டாட்சிர் பிரகாஷ், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உ-றுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.