பொன்மலை வாரச்சந்தையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைக்க வேண்டும் : மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
திருச்சி, நவ.22 திருச்சி பொன்மலை வாரச்சந்தையை அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைக்க வேண்டும் : மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் திருச்சி பொன்மலை முக்கிய நகரமாக இருந்தது. பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய ரெயில்வேயின் ஒரு பகுதியான தெற்கு ரெயில்வேயின் தலைமை இடமும் திருச்சியை மையமாக கொண்டே செயல்பட்டு வந்தது. பொன்மலையில் தான் ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் இருந்தனர். மேலும் ரெயில்வே பணிமனையிலும் ஆங்கிலேயர்கள் அதிக அளவில் பணியாற்றி வந்தனர்.
பொன்மலை வாரச்சந்தை
ஆங்கிலேயர்கள் தேவைக்காக கடந்த 1926-ம் ஆண்டு உருவாக் கப்பட்டது தான் பொன்மலை – சந்தை. அந்த கால கட்டத்தில் பிரிட்டீஷ் அரசு ரெயில்வே ஊழியர்களுக்கு மாதம் இருமுறை சம்பளம் வழங்கியதால் ஒவ் வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதல் இரவு வரையிலும் சந்தை பரபரப்பாக செயல் பட்டது. பதினைந்து நாள் சம்பளமுறை ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதி ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்ட பின்னர் இது வார சந்தையாக அதாவது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் வகையில் மாற்றம்.பொன்மலை ரெயில்வே பணி ஆர்மரிகேட்டிற்கு எதிரே உள்ள ரெயில்வே இடத் தில் இந்த வாரச்சந்தை நூற்றாண்டை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது. பொன் மலை மற்றும் அதனை சார்ந்துள்ள பொன்மலைப்பட்டி, கல்கண்டார் கோட்டை, நத்தமாடிப்பட்டி, ஆலத்தூர், கிழக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் நீண்ட தொலைவில் உள்ள காந்திமார்க்கெட்டிற்கு செல்வதை தவிர்த்து, பொன்மலை வாரச்சந்தையை பயன்படுத்த தொடங்கினார்கள்.
கிளி முதல் எலி வரை…
பரந்த மைதானத்தில் சில ஓட்டு கட்டிடங்கள், தென்னங்கீற்றால் வேயப்பட்ட கடைகள், திறந்தவெளி கடைகள் என இங்கு காலை முதல் இரவு வரை வியாபாரம் களை கட்டும்.
காய்கறிகள், மளிகை பொருட்கள், தானியங்கள், எலக்ட்ரா னிக்ஸ் பொருட்கள், பானை, சட்டி, பாத்திரங்கள் உள்பட தளவாட பொருட்கள், துணி வகைகள், நாய், பூனை, நாட்டுக்கோழிகள், கலர்மீன்கள்,தொட்டிகள், பூச்செடிகள், கோழிக்குஞ்சுகள், ஆட்டுக் குட்டிகள், எலி,பலவண்ணகிளி, மைனா, வண்ணப்பறவைகள், விலங்குகளும், பறவைகளும்மற்றும் சைனா பொருட்கள் உள்பட அனைத்து விதமான இங்கு விற்பனை செய்யப்படுவது தான் பொன்மலை வாரச்சந்தையின் சிறப்பாக இருந்துவருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் விளைவித்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை இங்கு உள்ள விவசாயிகள் தாங்கள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால், இது ஒரு அறிவிக்கப்படாத உழவர் சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது. புத்தம் புதிதாக காய்கறிகள், பறவைகள், விலங்குகள் உள்பட அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைப்பதால், திருச்சிநகரின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மற்றும் நகரை தாண்டி புறநகர் பகுதிகளில் உள்ளவர்களும் வந்து செல்லும் ஒரு பெரிய வர்த்தக மையமாக இந்த வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
தற்போது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் வியாபார உத்திகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பொன்மலை வாரச்சந்தையின் மவுசு இன்னும் குறையாமல் தான் உள்ளது.
எனவே பொன்மலை வாரச்சந்தையில் தற்பொழுது உள்ள குறைகள்
1.இங்கு 1000 மேற்பட்ட கடைகள் சந்தை உள்ளேயும் பல நூறு கடைகள் ரோடுகளிலும் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்புகள் அதிகமாகிறது
2. ரயில்வே மருத்துவமனை அருகில் உள்ளதால் வாகனங்கள் வர மிகவும் அவதிபடுகிறார்கள்.
3. இங்கு உள்ள கடைகள் அனைத்து குத்தகைகாரர்கள் வசூல் செய்கிறார்கள், ஆனால் கடைகளுக்கும், கடைகாரர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தருவது இல்லை. உதாரணம்: கடைகளுக்கு கட்டிடம் மற்றும் மேற்கூரைகள் இல்லை, பொதுமக்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை, வண்டிகள் நிறுத்த சரியான இடவசதி செய்து தரவில்லை.
4. தண்ணீர் வசதி இல்லை போன்ற பல குறைகள் உள்ளது.
5. மாடுகள், நாய்கள் போன்றவைகளால் தொல்லைகள் அதிகம்.
6. மழை பெய்யும் நேரத்தில் வியாபாரிகளுக்கும், பொது மக்களும் நடக்க முடியாத அளவிற்கு சேறும், சகதிகள் இருக்கிறது.
வேறு இடத்திற்கு மாற்றம்
அடுத்த ஆண்டு இருந்து பொன்மலை பணிமனை மட்டும் அல்ல அதன் அருகில் உள்ள இந்த வாரச்சந்தையும் நூற்றாண்டு விழா கொண்டாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன்மலை வாரச்சந்தை வேறு இடத்திற்கு அதாவது அனைத்து வசதிகள் கூடி இடத்தை தேர்வு செய்து தருமாறு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ரெயில் நிலையங்களுக்கு இடை பொன்மலை- மஞ்சத்திடல்யில் மெமு ரெயில் பராமரிப்பு பணிமனை ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தஆண்டு இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் விரிவாக்க பணிகளுக்காக தற்போது வாரச்சந்தையாக பயன்படுத்தப்பட்டு வரும் இடமும் தேவைப்படுவதால் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டலாம். எனவே பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் உள்ள வ.உ.சி திடலில் பகுதியில் இந்த வாரச்சந்தையை அனைத்து வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மக்கள் இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை விடுத்துள்ளார்