புதுக்கோட்டை – கந்தர்வக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்: துரை வைகோ எம்.பி. திறந்து வைத்தார்

0 20
Stalin trichy visit

புதுக்கோட்டை, அக்.14  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்
புதுக்கோட்டை – கந்தவர்க்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்:   துரை வைகோ எம்.பி. திறந்து வைத்தார்

புதுக்கோட்டை – கந்தவர்க்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் துரை வைகோ எம்.பி திறந்து வைத்தார். இதுகுறித்து திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை – கந்தவர்க்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்களின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை, கந்தவர்க்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில், மொத்தம் ரூ.62 இலட்சம் மதிப்பில் இரண்டு பயணியர் நிழற்குடையும், நாடக கலையரங்கம், அங்கன்வாடி மய்யம், நியாய விலைக் கடை, நிழற்கூடம், ஆகியவை இச்சடி, தொண்டைமான்விடுதி, கோமாபுரம், சுந்தம்பட்டி, வெள்ளாள விடுதி, கருப்புடையான் பட்டி ஆகிய இடங்களில் மேற்கண்ட திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூ. 38 இலட்சம் மதிப்பில் இரண்டு பேவர் பிளாக் சாலைகளும் மற்றும் கலையரங்கம், தார்ச்சாலை, உயர் கோபுர மின்விளக்கு தலா ஒரு இடங்களிலும் செயல்படுத்தப்பட்டன. புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 15 ஒத்தத்தெரு மற்றும் கணேஷ் நகர், மறவப்பட்டி, திருமலைராய சமுத்திரம், சாந்தநாதபுரம் வார்டு 17 டாக்டர் முத்துராஜா மருத்துவமனை அருகில் இவை திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னத்துரை , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வளத்தான், கந்தர்வகோட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மா.தமிழ்அய்யா, புதுக்கோட்டை மாநகர தெற்கு பகுதி பொறுப்பாளர் ராஜேஷ் , வட்டார காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் கோமாபுரம் தலைவர் அன்பு, புதுக்கோட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் முன்னாள் சேர்மன் வைகோ ராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், துறை சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எஸ் கே கலியமூர்த்தி , மாவட்ட அவை தலைவர் தாமஸ் விக்டர், பொருளாளர் ராஜா ஆதிமூலம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் காசி சிற்றரசு,மாவட்ட துணைச் செயலாளர் வி கே மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன் நடராஜன் செல்வராஜ் குணசேகரன், புதுக்கோட்டை மாநகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் காசிலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் வைர மூர்த்தி, ஞான பிரகாசம், K. பாண்டியன்,சேது கலையரசன், சவரிநாதன்,நகர செயலாளர் G. கிருஷ்ணமூர்த்தி, அறந்தாங்கி சத்தியநாராயணன் சிறுபான்மை மாவட்ட தலைவர் அமருதுல்லா, மாநகர துணை செயலாளர் கருணாகரன் பொதுக்குழு கவிச்செல்வம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அஜித், புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரேசன், மாவட்ட தொழிற்சங்கம் V. ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி வை. செல்லத்துரை, உருமையா, மாவட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.