வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ரகசிய வாக்கெடுப்பு

0 148
Stalin trichy visit

திருச்சி, நவ. 21  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் குறித்த ரகசிய வாக்கெடுப்பு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. போராட்டத்தில் எதிரொலியாக மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து கோரிக்கை குறித்த பரிசீலனை நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ – ஏ.ஐ.ஆர்.எஃப் தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டது. அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மன நிலையை அறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 21,22,23 ஆகிய மூன்று நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மூன்று நாட்கள் தென்னக ரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பொது வேலை நிறுத்த ரகசிய வாக்கெடுப்பு குறித்து பேசிய எஸ்
ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன்,
கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.
ஏறத்தாழ 96 சதவீத பேர் வேலை நிறுத்தத்திற்கு தயாராக உள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அனைவரின் ஒப்புதலோடு இந்த போராட்டம் நடைபெறும் கோரிக்கை மீட்டெடுக்கப்படும் என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.