முசிறி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.61லட்சம் பறிமுதல்

0 21
Stalin trichy visit

முசிறி அருகே கம்பி வாங்க உரிய ஆவணங்கள் இன்றி சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ 1 லட்சத்தி 61,300 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதியில் உன்னியூர் எல்லை கருப்பு கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கண்ணன் தலைமையில் தலைமை காவலர் புருஷோத்தமன், பெண் காவலர் சாந்தி, முதல் நிலைகாவலர் மோகன்தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காட்டுப்புத்தூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (35) என்பவர் கம்பிகள் வாங்குவதற்காக பணம் ரூ ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 300 உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் கணக்கில் வராமல் கொண்டு சென்ற ரூ 1 லட்சத்து 61ஆயிரத்து 300 பணத்தை பறிமுதல் செய்து முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன் இடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த பணம் சீல் வைக்கப்பட்டு முசிறி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.